வாகன பட்டரிகள் திருடியவர் பொலிஸாரினால் கைது

-பதுளை நிருபர்-

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில்  பட்டரிகளை திருடியவர் பண்டாரவளை பொலிஸாரினால் கைது.

ஹல்தமுள்ள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிவானாகம என்ற பகுதியில் வாகனங்களில் உள்ள பட்டரி மற்றும் வாகன கடத்தலில் ஈடுபட்டு வந்த 38 வயதுடைய இலுக்கேட்டிய மந்தன்ன கிரிவானகம பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பண்டாரவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றதினால் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்