இலங்கையின் கையிருப்புகளை 8.4 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கத் திட்டம்

இலங்கையின் கையிருப்புகளை 8.4 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கத் திட்டம்

இலங்கை தனது அந்நிய செலாவணி கையிருப்புகளை குறைந்தபட்சம் 8.4 பில்லியன் டொலர்களால் அதிகரிப்பதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது என சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை மேற்கோள்காட்டி சண்டே டைம்ஸ் இச் செய்தியை வெளியிட்டுள்ளது.

இத் திட்டத்தின்படி அடுத்த இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிதி வசதிகளாக, ஆசிய அபிவிருந்தி வங்கி இலங்கைக்கு வழங்கவுள்ள 1 பில்லியன் டொலர்கள்,  உலக வங்கி ஏற்கனவே உறுதியளித்துள்ளதுள்ள 1.5 பில்லியன் டொலர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், மார்ச் 20 அன்று சர்வதேச நாணய நிதியத்தின்  அனுமதியால் 2.9 பில்லியன் டொலர்கள் கடன் கிடைக்க உள்ளது.

அத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின்  மறுசீரமைப்பு மூலம் 3 பில்லியன் டொலர்கள்  திரட்டப்படும் என்றும், இந்த நிதி வசதிகளின் திட்டங்களை சர்வதேச நாணய நிதியம் நிதி வழங்கத் தொடங்கிய பின்னர், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை கட்டியெழுப்புவது உடனடியாக ஆரம்பிக்கப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்