தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் இருந்து ஆறு இலங்கை அகதிகள் நியூசிலாந்திற்கு தப்பி ஓடுவதற்கு முயற்சித்ததாக இந்தியாவில் உள்ள தமிழ்நாடு பொலிஸாரின் Q- Branch குற்றவியல் விசாரணைத் துறை தெரவித்துள்ளது.
குலதுவாய்பட்டி முகாமில் இருந்து கெனுஜன் (வயது 34), ஜெனிஃபர் ராஜ் (வயது 23), தினேஷ் (வயது 18), புவனேஷ்வரி (வயது 40) , கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஹோசூருக்கு அருகிலுள்ள கெலவரபள்ளி முகாமில் இருந்து, சதீஷரன் (வயது 32), சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த துஷ்யந்தன் (வயது 36) வேலூர் மாவட்டத்தில் உள்ள குடிமல்லூர் முகாம், ஆகியோரே இந்தியாவை விட்டு நியூசிலாந்திற்கு வெளியேற முயற்சித்ததாக தி இந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்த முயற்சியை துஷ்யந்தன் மற்றும் புவனேஷ்வரி ஆகியோரால் முன்னெடுத்துச் சென்றதாக தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.அவர்கள் இந்தியாவிலிருந்து நியூசிலாந்திற்குச் படகு மூலம் செல்ல பூம்பூஹாரில் உள்ள படகு உரிமையாளரிடமிருந்து படகு ஒன்றை வாங்க திட்டமிட்டிருந்தனர்.
துஷ்யந்தன் ஒரு மீனவர் போனறு நடித்து படகு உரிமையாளரை அணுகியிருந்தார், மேலும் 36 லட்சத்திற்கு ஒரு படகு வாங்குவதற்காக அவருடன் ஒரு ஒப்பந்தத்திற்கு வந்திருந்தார்.
அதற்காக முற்பணமாக 11 லட்சம் ரூபாய் பணத்தை செலுத்தியிருந்தார் துஷ்யந்தன். அப்போது ஆறு அகதிகளும் மூன்று நாட்களுக்கு முன்பு வேலங்கன்னிக்கு வந்து, ஒரு விடுதியில் தங்கினர். கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலிற்கமைய கியூ-கிளை பொலிஸாரும் வேலங்கன்னி பொலிஸாரும் விடுதியில் சோதனை நடத்திய போது குறித்த ஆறு பேரையும் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து சுமார் 16,92,951 இந்தியன் ரூபாயையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
இந்த முயற்சியில் இன்னும் சில நபர்களும் ஈடுபட்டுள்ளதாக தாம் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ள பொலிஸார், முழுமையான விசாரணையின் பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.