நாட்டின் பொருளாதார பிரச்சினையை தீர்க்க LOLC குழுமத்தின் ஆதரவு

இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதில் தலையிடுவதற்கு LOLC குழுமம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதனடிப்படையில், தமது குழுவின் சர்வதேச வலையமைப்பின் ஊடாக இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

LOLC குழுமம் தற்போது 20க்கும் மேற்பட்ட நாடுகளில் வணிகம் செய்து வருகிறது.

அதன் மூலம் நாட்டின் பொருளாதார பிரச்சனைகளை போக்க உதவ LOLC குழுமம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.