அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சட்ட ரீதியாக அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் காணப்படுகின்ற போதை பொருளை எரித்து அழிப்பதற்கு புதிய முறையொன்று உருவாக்கப்படும் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் இதன்போது அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் 3000 கிலோகிராம் எடையுடைய போதை பொருள் களஞ்சியத்தில் உள்ளதாக விஜயதாச ராஜபக்ச இதன்போது குறிப்பிட்டார்.
நீதி அமைச்சில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே நீதி அமைச்சர் இதனை தெரிவித்தார்.
மேலும், அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சர்வதேச நாடுகளிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருளை அனுப்பும் நபர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.