இலங்கை மத்திய வங்கியானது பெப்ரவரி 22 ஆம் திகதி 75 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைச்சேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது
இதன் அடிப்படையில், 35,000 மில்லியன் ரூபா பெறுமதியான 91 நாட்கள் முதிர்வு காலத்தை திறைசேரி உண்டியல்களும், 20 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான 182 நாட்கள் முதிர்வு காலத்தை கொண்ட திறைசேரி உண்டியல்களும், 20 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான 364 நாட்கள் முதிர்வு காலத்தை கொண்ட திறைசேரி உண்டியல்களும் ஏலமிடப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.