Sri Lanka Tamil News Site

அரச பணியாளர்களின் சம்பளத்தை இரு வேறு நாட்களில் வழங்க தீர்மானம்

- Advertisement -

அரச துறையில் பதவி நிலை அல்லாத உத்தியோகத்தர்களது மாதாந்த வேதனத்தை உரிய திகதியிலும், பதவி நிலை உத்தியோகத்தர்களின் மாதாந்த வேதனத்தை சில தினங்கள் தாமதித்தும் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

- Advertisement -

மூத்த பிரஜைகளின் ஓய்வூதியம் வழங்குவதில் சில நாட்கள் தாமதமாகலாம், தாமதமான போதிலும் உரிய கொடுப்பனவுகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார், யாரும் சந்தேகத்தையோ, அவநம்பிக்கையையோ உருவாக்க வேண்டாம். எப்படியிருந்தாலும், அரசு ஊழியர் சம்பளம், ஓய்வூதியம், உரம், மருந்துகள், போன்றவற்றுக்கு பணம் வழங்கப்படுகிறது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான நிதி உதவியை 2023 மே முதல் செப்டெம்பர் வரை மேலும் 5 மாதங்களுக்கு நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

- Advertisement -