இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை தனியார் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
இச்சம்பவமானது இரத்தினபுரி – ஹொரணை வீதியில் பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது பேருந்தில் இருந்த பயணிகள் உயிரை பாதுகாத்துக்கொள்ள வெளியே குதித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பாக இரத்திபுரியில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த பேருந்து ஹொரணை பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு முன்பாக உள்ள பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணத்தை ஆரம்பித்தவுடன் பேருந்தின் முன்பகுதி தீப்பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது பேருந்தில் 40இற்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததோடு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரியவருகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்