பல்கலைக்கழக அனுமதிக்கு இன்று இறுதி வாய்ப்பு

பல்கலைக்கழக அனுமதிக்கான இணையவழி விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளது.

இதுவரையில் 85,000ற்கும் அதிகமான விண்ணப்பங்கள் இணையத்தளம் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது எனவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் பல்கலைக்கழகத்தின் முன்னுரிமையை மாற்றுவதற்கு மாத்திரம் நாளை முதல் எதிர்வரும் 19ஆம் திகதிவரை அவகாசம் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்