மட்டு வடக்கு கலாசார மத்திய நிலையம் நடாத்தும் சான்றிதழ் வழங்கும் விழா

-சௌமினி சுதந்தராஜ்-

மட்டு வடக்கு கலாசார மத்திய நிலையம் நடாத்தும் சான்றிதழ் வழங்கும் விழா

மட்டக்களப்பு புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் நடாத்தும் சான்றிதல் வழங்கும் விழா.

வடக்கு கலாசார மத்திய நிலையத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான சான்றுதழ் வழங்கும் விழாவானது திருமதி அமலினி ரஞ்சித் குமார் தலைமையில் (நிலைய பொறுப்பதிகாரி) நேற்று சனிக்கிழமை பி.ப 2.00 மணியளவில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக திரு.வ.வாசுதேவன் (பிரதம செயலாளர் பிரதேச செயலகம் மண்முனை வடக்கு), கௌரவ அதிதியாக ஜனாப் எம்.ஏ.சி.ஜெய்னுலாப்தீன் (மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மாவட்ட செயலகம் மட்டக்களப்பு), திருமதி.வளர்மதி ராஜ் (கலாசார உத்தியோகத்தர் பிரதேச செயலகம் மண்முனை வடக்கு), சிறப்பு அதிதிகளாக  திரு ஏ.எஸ்.பாய்வா (நிலைய வளவாளர்), திரு பி.எஸ்.ஜெயசிங்கம் (நிலைய வளவாளர்), திருமதி எஸ்.ஷர்மிலதா பிரபாகரன் (நிலைய வளவாளர்), திரு என். துஜோகாந் (நிலையவளவாளர்), என். குகன் (நிலைய வளவாளர்), திரு எஸ்.நரேந்திரா (நிலைய வளவாளர்), திருமதி கலைவதனி (நிலைய வளவாளர்), திருமதி சாரங்கி நரேந்திரா (நிலைய வளவாளர்) கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது அதிதிகளை வரவேற்றல் இடம்பெற்றது.பின்னர்தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இந் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றப்பட்டு மௌன இறை வணக்கம் இடம்பெற்றது.பின்னர் திருமதி எஸ்.ஷர்மிலதாவால்  வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

அதனை தொடர்ந்து கலாச்சார மத்திய நிலைய நடன மாணவர்களால் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.

பின்னர் அதிதிகளை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து கலாச்சார மத்திய நிலைய மாணவர்களால் மிருதங்க கச்சேரி, நடனம்,இசை நிகழ்வு, நாடகம் என்பன இடம்பெற்றது.

தொடர்ந்து பிரதம விருந்தினர் திரு வ. வாசுதேவனால் உரை நிகழ்த்தப்பட்டது.தொடர்ந்து ஆங்கில,சிங்கள,நாடக பாடநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும் அதி கூடிய புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பின்னர் கலாச்சார மத்திய நிலைய மாணவியால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டு முடிவுற்றது.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்