தொழில் மற்றும் நிதி திட்டமிடல் பிரதியமைச்சர் அனில் ஜெயந்த, இன்று சனிக்கிழமை, கிளிநொச்சிக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது, ஆனையிறவு பகுதியில் முன்னர் உப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்ட குறிஞ்சாதீவு பகுதியை அமைச்சர் பார்வையிட்டதுடன், ஆனையிறவு உப்பளத்தின் செயற்பாடுகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் கட்டுமாண பணிகளை பார்வையிட்டார்.

அமைச்சருடன் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெ.ரஜீவன், க.இளங்குமரன், தேசிய உப்பு நிறுவனத்தின் தலைவர், பரந்தன் இரசாயன தொழிற்சாலையின் தலைவர், முதலீட்டு சபையின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
