மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட, செட்டிபாளையம் கிரிக்கெட் சுற்றுப்போட்டியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் (ஜனா) தமது நாடாளுமன்ற நிதி ஒதுக்கீட்டின் கீழ் 04 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட விளையாட்டு அரங்கு திறப்பு விழாவும், கழக தலைவர் வேணுகோபாலராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், விளையாட்டு உத்தியோகத்தர்கள், சங்கங்கள், ஆலயங்களின் பிரதிநிதிகள், கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.











