-யாழ் நிருபர்-
யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில், சித்திரை புதுவருட தினத்தினை முன்னிட்டு, கைவிசேடம் வழங்கும் நிகழ்வு, இன்றையதினம் புதன்கிழமை காலை 9.05 மணிக்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் கைவிசேடத்தினை வழங்கிவைத்தார்.