இடியுடன் கூடிய மழை: வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

நாட்டின் பல பாகங்களில் இன்றைய தினம் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, ஊவா, தென், மாகாணங்களிலும் நுவரெலிய, கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யக்கூடும்.

புத்தளம் முதல் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பிரதேசம் கொந்தளிப்பாக காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கடல்சார் மற்றும் மீனவ சமூகம் கவனத்துடன் செயற்பட வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்