அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் இன்று திங்கட்கிழமை சிறியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி இன்று 329.30 ரூபாவாக காணப்படுகின்றது.
அதன் விற்பனை பெறுமதி 339.06 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கடந்த வௌ்ளிக்கிழமை வௌியிடப்பட்ட நாணய மாற்று விகிதத்தின் படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 328.85 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 338.70 ரூபாவாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.