மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து ஆறு தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து இன்று திங்கட்கிழமை விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர்.
இந்த விசேட ஊடக சந்திப்பானது கொழும்பில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் இன்று பிற்பகல் இடம்பெற்றிருந்தது.
இதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகியவற்றின் தலைவர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்துவது, புதிய அரசியலமைப்பு மற்றும் காணி விவகாரம் உள்ளிட்ட முக்கிய மூன்று கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.