மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள புரவுன்சீக் தோட்ட பிரிவில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த 20 தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு ஆளாகியுள்ளனர்.
இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை நண்பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் பெண் தொழிலாளர்கள் தேயிலை பறித்துக்கொண்டிருக்கையில் அங்கிருந்த குளவிக்கூடு கலைந்து குளவிகள் தொழிலாளர்களை தாக்கியுள்ளது.
இதன்போது குளவிக்கொட்டுக்கு இலக்கான 20 தொழிலாளர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அர்களில் 12 பெண் தொழிலாளர்கள் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறி உள்ளனர்.
ஏனைய எட்டு பெண்கள் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர் என மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்