மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட, திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி மற்றும் வாழைச்சேனை – மட்டக்களப்பு பிரதான வீதிகளில், கட்டாக்காலி மாடுகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதனால் வீதி விபத்துக்கள் ஏற்படுவதாகவும், கட்டாக்காலி மாடுகள் சந்தைகளில் மற்றும் கடைகளில் புகுந்து மரக்கறிகள் மற்றும் பழங்களை உண்பதால் வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் ஆலய வீதிகளையும் இந்த கட்டாக்காலி மாடுகள் அசுத்தப்படுத்துவதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் மற்றும் தவிசாளர் இந்த விடயத்தை கவனத்தில் எடுத்து, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.