ஹரின் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு மீளப்பெறப்பட்டது

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு மீள பெறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கிய அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணையை முடிவுறுத்துமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு அண்மையில் பணிப்புரை விடுத்தார்.

இந்தநிலையில்இ குறித்த மனுவை மீள பெற தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றுக்கு அறிவித்தார்.