பெற்ற மகனை கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கல்லால் அடித்து கொலை செய்த தாய்

 

இந்தியாவில் பெற்ற மகனை கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொலை செய்த தாய் மற்றும் பெரியம்மா கைது செய்யப்பட்டுள்ளனர்.

தென்னாங்கூர் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான சுரேஷ்(வயது – 35) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மது பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி குடித்துவிட்டு வந்து தனது தாயிடம் தகராறில் ஈடுபடுவதுடன் நேற்று வியாழக்கிழமை வீட்டில் இருந்த அவரது தாய் ருக்குமணி மற்றும் அவரது பெரியம்மா முனியம்மாளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அத்துடன் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறி இருவரிடமும் சண்டையிட்டு தாக்கியுள்ளார்.

இதன்போது குடிகாரனாக உனக்கு யாரும் பெண் தர மறுக்கிறார்கள் என்று இருவரும் கூறியுள்ளனர். அதனால் ஆத்திரமடைந்த அவர் இருவரையும் கடுமையாகத் தாக்கியதாக கூறப்படுகிறது.

அவர்கள் இருவரும், பதிலுக்கு அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெயை எடுத்து சுரேஷின் தலையில் ஊற்றியுள்ளனர்.

இதனால் துடிதுடித்து கீழே விழுந்து அலறிய சுரேஷை அருகே இருந்த கல்லைக் கொண்டு தலையில் பலமாக தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலை குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், சுரேஷின் தாய் ருக்குமணி மற்றும் பெரியம்மா முனியம்மாள் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.