மகனுக்கு கைதி உடை போட்டோஷூட் நடத்திய தந்தை

நடிகை பவித்ரா கவுடாவுக்கு இன்ஸ்டாகிராமில் போலி கணக்கில் இருந்து ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இதில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உட்பட 17 பேர் கைதாகி உள்ளனர்.

தற்போது நடிகர் தர்ஷன் பெங்களூரு அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி எண் 6,106 வழக்கப்பட்டுள்ளது.

அவரது ரசிகர்கள் பலரும் இந்த எண்ணை தங்கள் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுகின்றனர். மேலும் உடலில் பச்சை குத்துவது உள்ளிட்ட பல்வேறு விதங்களில் நடிகர் தர்ஷனின் கைதி எண்ணை மகிழ்ச்சியுடன் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் தர்ஷனின் ரசிகர் ஒருவர் தனது ஒரு வயது குழந்தைக்கு வினோத முறையில் ‘போட்டோசூட்’ நடத்தி உள்ளார்.

அதாவது தனது குழந்தைக்கு சிறை கைதிகளின் உடையை அணிவித்துள்ளார். அதில் நடிகர் தர்ஷனின் கைதி எண் 6,106 பொறிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் அருகே கைதிகளுக்கான கைவிலங்கு, ஜெய் டி-பாஸ் போன்ற வசனங்களை வரைந்து இருந்தார்.

அதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும் சிலர் ஆதரவு அளித்து வருகின்றனர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்