இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் எந்த வகையிலும் முடக்கப்படவில்லையென அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வழக்கின் ஊடாகக் கட்சியின் நிர்வாகத் தெரிவுகள் மாத்திரமே இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் தேர்தலில் கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியும் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் நேற்றைய தினம் வவுனியாவில் இடம்பெற்றது.
இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்