மட்டக்களப்பில் “சுரண்டப்பட்ட பணம்”  என தலைப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள்

மட்டக்களப்பு நகர் பகுதிகளில் இன்று “சுரண்டப்பட்ட பணம்”  என தலைப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் சில இடங்களில் ஒட்டப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸின் படத்தை பிரசுரித்து இத் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அத் துண்டுப்பிரசுரத்தில்,

“தர்மலிங்கம் சுரேஸ் ஒரு மஹா திருடன்  அந்த பணத்தை மாவீரர்களின் குடும்பத்தினருக்கு திரும்பி கொடுத்து விடு, அண்ணன் சங்கபிள்ளை அவர்களே நீங்களே வீரர்களுக்கு முன்மாதிரி” என்றும் அச்சிடப்பட்டுள்ளது.