தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) 11 ஆவது மாநாட்டிற்குரிய புதிய நிர்வாகத் தெரிவுக்கான கூட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
இதன்போது தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் ஜனா, உபதலைவராக அம்பாறை மாவட்ட முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ஹென்றி மகேந்திரன், தேசிய அமைப்பாளராக மட்டக்களப்பு முன்னாள் மாகாணசபை பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, பொருளாளராக குருசாமி சுரேந்திரன், நிர்வாக செயலாளராக வடமாகாசபை உறுப்பினர் எம்.விந்தன் கனகரட்ணம், இளைஞரணி செயலாளராக வவுனியா மாவட்ட உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய கூட்டத்தில் கட்சியின் 200 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


