அகில இலங்கைக் கம்பன் கழகத்தின், கம்பன் விழாவின் இறுதி நாள் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை, கொழும்பில் நடைபெற்றது.
இதில் அமரர் பொன் பாலசுந்தரம் ஞாபகார்த்த தேசிய மட்ட கவிதைப் போட்டியின் திறந்த பிரிவில் முதலாம் இடத்தை மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர் கந்தசாமி அபிலாஷ் பெற்றுக் கொண்டார்.
முதலாம் இடத்தைப் பெற்றமைக்காக அபிலாஷிக்கு தங்கப்பதக்கமும், சான்றிதழும், புத்தகத் தொகுப்பும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
ஏப்ரல் 30 தொடக்கம் மே 3 ஆம் திகதி வரை கொழும்பு இராமகிருஷ்ண மிஷனில் வெகுவிமர்சையாக இடம்பெற்ற இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளில் இருந்தும், குறிப்பாக இந்தியாவிலிருந்து பிரபல மேடைப்பேச்சாளர்கள், மாமேதைகள், இலக்கியவாதிகள், தமிழ்த் துறை பேராசியர்கள், மற்றும் பலர் பங்குபற்றினர்.