இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில், தேயிலை துாள் என்று நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தில் தயாரிக்கப்பட்ட தேனீரை அருந்தியமையால் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
சம்பவத்தில் ஒரு வீட்டின் மூவர் மற்றும் அயலவர்கள் இருவர் என ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
நெற்பயிருக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லியே தவறுதலாக தேயிலை துாள் என கருதி தேனீர் தயாரிக்க பயன்படுத்தியுள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
எனினும் இந்த சம்பவம் தொடர்பில் தேனீர் தயாரித்த வீட்டின் பெண் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.