Sri Lanka Tamil News Site

நீச்சல் தடாகத்தில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

- Advertisement -

வென்னப்புவ பொரலஸ்ஸ பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றின் நீச்சல் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பன்னல-மகதுர பிரதேசத்தை சேர்ந்த 80 மாணவர்கள் சுற்றுலா சென்றுள்ள நிலையில், சுற்றுலாவின் ஒரு பகுதியாக குறித்த இடத்திற்கு வருகை தந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

உயிரிழந்த மாணவன், மாணவர்கள் குழுவுடன் குளத்தில் குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -