தென் மாகாணத்திற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களிடம் இருந்து கப்பம் பெறுதல் மற்றும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளும் குழுக்களை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -
இந்த விசேட பொலிஸ் குழுவில் பெந்தோட்டை தொடக்கம் கதிர்காமம் பொலிஸ் நிலையங்கள் வரை 600 அதிகாரிகள் உள்ளனர்.
தென் மாகாணத்தில் உள்ள கடற்கரையை பயன்படுத்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் சிலர் கட்டணம் வசூலிப்பதாக எழுந்த முறைப்பாடுகளை அடுத்து இந்த விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -