நுவரெலியா மாவட்டம் கோட்டம் ஒன்றின் கீழ் இயங்கும் நானுஓயா நு/எபட்ஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில், நவீன கணினி (SMART CLASS ROOM) ஒன்றும், கடந்த வருடம் நாட்டில் ஏற்பட்ட மோசமான காலநிலையின் போது பாதிக்கப்பட்ட பாடசாலையின் மலசல கூடத்தை புணர்நிர்மானம் செய்து அவற்றை கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது .
FOUNTATION OF GOODNESS நிறுவனம் மற்றும் இலங்கை டித்வா சூறாவளி மீள் கட்டமைப்பு நிலையம் இணைத்து குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
நவீன உலகில் வளமான டிஜிட்டல் எதிர்காலத்திற்காக, நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் இணைய வசதிகளுடன் இவ் ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் கணினிகள் கையளிக்கப்பட்டுள்ளன.
நானுஓயா நு/எபட்ஸ்போட் தமிழ் வித்தியாலய அதிபர் சன்முகம் வில்வராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நிதியுதவி செய்ய அதிகாரிகள், கல்வி பணிப்பாளர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் பாடசாலை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.