மாணவர்களுக்கு பொலிஸாரால் விழிப்புணர்வு செயற்பாடு
பாடசாலை வேளைகளில் பாடசாலைக்கு அருகில் போக்குவரத்து கடமையில் ஈடுபடுவது தொடர்பில் மாணவர்களுக்கு, யாழ்ப்பாண பொலிஸார் விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் பாடசாலைக்கு அருகில் போக்குவரத்து கடமையில் ஈடுபடும் மாணவர்களுக்கான விசேட பயிற்சியும், போக்குவரத்து காப்பாளர் அங்கி வழங்கி வைக்கும் நிகழ்வும் யாழ்ப்பாண மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் சம்பந்தமான விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது.