விண்வெளியில் மனிதர்கள் நிரந்தரமாகக் குடியேறி, அங்கு குழந்தை பெற்றுக்கொள்வது எதிர்பார்த்ததை விட மிகவும் சவாலானதாக இருக்கும் என புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.
ஆய்வின்படி, விண்வெளியில் நிலவும் பூஜ்ய ஈர்ப்புவிசை (Microgravity) மற்றும் அதிக கதிர்வீச்சு காரணமாக, இனப்பெருக்கத்திற்குத் தேவையான விந்து மற்றும் கருமுட்டை (அணு) உருவாக்கும் செல்களின் செயல்திறன் 50 சதவீதம் வரை குறையக்கூடும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், உடலின் செல்கள் பெருகும் வேகம் 25 சதவீதம் வரை மந்தமடைவதால், கர்ப்பம், கருவின் வளர்ச்சி மற்றும் மனித இனப்பெருக்கம் தொடர்பான செயல்முறைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
எதிர்காலத்தில் சந்திரன் மற்றும் செவ்வாய் போன்ற கிரகங்களில் மனிதக் குடியிருப்புகளை அமைக்கும் திட்டங்களுக்கு, இந்த ஆய்வு முக்கியமான சவால்களை எடுத்துக்காட்டுவதாகக் கருதப்படுகிறது.