2026 உலக கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டினாவை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து, இரண்டு அணி வீரர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
போட்டி முடிந்த உடனேயே ஆர்ஜென்டினா வீரர் லியாண்ட்ரோ பரேடஸ், ஸ்பெயின் வீரர் எரிக் கார்சியாவுடன் மோதலில் ஈடுபட்டார்.
இதையடுத்து போட்டியில் விளையாடாத ஸ்பெயின் வீரர் காவி, பரேடஸை எதிர்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதைத் தொடர்ந்து இரண்டு அணி வீரர்களும் ஒருவரை ஒருவர் தள்ளுமுள்ளு செய்து மோதிக் கொண்டனர்.
நிலைமை மேலும் மோசமடைவதைத் தடுக்க ஆர்ஜென்டினா தலைமைப் பயிற்சியாளர் லியோனல் ஸ்கலோனி நேரடியாக களமிறங்கி தனது அணியின் வீரர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றார்.
இதற்கு முன்பும், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்குப் பிறகு ஆர்ஜென்டினா வீரர் வாலென்டின் பார்கோ மற்றும் இங்கிலாந்து வீரர் ஜூட் பெலிங்காம் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.