சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலய வருடாந்த வைகாசிப் பொங்கல் பெருவிழா

-மூதூர் நிருபர்-

கிழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க மூதூர் – கட்டைபறிச்சான் வடக்கு – சேனையூர் ஸ்ரீ நாகம்மாள் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி 52 நிமிட சுபவேளையில் இடம்பெற்றது.

இதன்போது சேனையூர் ஸ்ரீ வருணகுல விநாயகர் ஆலயத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி மடைப்பெட்டி ஊர்வலம் நாகம்மாள் ஆலயத்தினைச் சென்றடைந்து பக்தி பூர்வமான கிரியையோடு மடைப்பெட்டி வளர்ந்து ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ அ . அரசரெத்தினம் அவர்களினால் கையேற்கப்பட்டது.

இதன்போது பல ஆலயங்களிலிருந் காவடி,பறவைக் காவடிகள் நாகதம்பிரான் ஆலயத்தை வந்தடைந்தது. நாகம்பிரானுக்கு மஞ்சல்நீர் வார்க்கும் நிகழ்வு,மஞ்சல் நூல் வளர்த்தலும் இடம்பெற்றன.இதன் பின்னர் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

வைகாசி பொங்கல் பெருவிழாவில் அதிகளவான சைவ பக்த அடியார்கள் வருகை தந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்