-மன்னார் நிருபர்-
மன்னார் மாவட்டத்தில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட 40 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை விதைக்கடலைகள் (கச்சான்) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடைய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் வடகிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் நிதி அனுசரணையில் தெரிவு செய்யப்பட்ட 40 விவசாயிகளுக்கு தலா 25 கிலோ நிறையுடைய விதைக்கடலை இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் பணியாளர்கள் இணைந்து மன்னாரில் உள்ள அலுவலகத்தில் வைத்து வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.