சம்மாந்துறை மத்திய வட்டாரத்திற்குட்பட்ட கருவாட்டுக்கல், அம்பாறை 1ம் வீதியில் கடந்த சுமார் 10 ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் காணப்பட்ட வடிகான் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
குறித்த வடிகான் சேதமடைந்திருந்த காரணத்தால் மழைக்காலங்களில் வெள்ள நீர் தேங்கி போக்குவரத்திற்கும், அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளுக்கும் பெரும் இடையூறாக இருந்து வந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை சம்மாந்துறை பிரதேச சபையின் கவனத்திற்குக் கொண்டு சென்று தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்ட பிரதேச சபை உறுப்பினர் ஹாதிக் இப்றாஹிம் தலையீட்டின் மூலம் வடிகான் சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பணிகளை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்த சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிருக்கும் மக்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
வடிகால் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மழைக்காலங்களில் நீர் தேங்கும் பிரச்சினை குறைவடையும் எனவும், பொதுமக்களின் சுகாதார மற்றும் போக்குவரத்து வசதிகள் மேம்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கி சேவையாற்றிய பிரதேச சபை உறுப்பினர் ஹாதிக் இப்றாஹிம் மற்றும் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் ஆகியோருக்கு கருவாட்டுக்கல் 1ம் வீதி மக்கள் தங்களது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.