கனமழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக, நாவலப்பிட்டி பகுதியில், வீட்டின் மீது பெரிய மரம் முறிந்து விழுந்ததில், வீட்டில் இருந்த நான்கு பேர் காயமடைந்ததாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 1:00 மணியளவில், நாவலப்பிட்டி மேல் இம்புல்பிட்டிய பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மரத்தின் கீழ் குறித்த வீட்டில் இருந்தவர்கள் சிக்கிக்கொண்ட நிலையில், அயல் வீட்டார்கள் அவர்களை உடனடியாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இதன் போது வீடு பலத்த சேதமடைந்துள்ளது.



