2026 ஃபிஃபா உலகக் கிண்ண காற்பந்து தொடரின் குரூப் ‘சி’ பிரிவில் நடைபெற்ற விறுவிறுப்பான லீக் போட்டியில், ஹைட்டி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்கொட்லாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
போட்டி தொடங்கியதில் இருந்தே இரு அணிகளும் சமபலத்துடன் மோதின.
எனினும், ஆட்டத்தின் 28ஆவது நிமிடத்தில் ஸ்கொட்லாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜான் மெக்கின் (John McGinn) ஒரு அற்புதமான கோலை அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, ஆட்டத்தின் இறுதிவரை ஹைட்டி அணியினரால் பதில் கோல் அடிக்க முடியவில்லை.
இந்த வெற்றியின் மூலம் ஸ்கொட்லாந்து அணி 3 புள்ளிகளுடன் குரூப் ‘சி’ பிரிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
தனது முதல் போட்டியில் தோல்வியடைந்த ஹைட்டி அணி எவ்வித புள்ளிகளுமின்றி கடைசி இடத்தில் உள்ளது.