மத்திய கிழக்கில் நிலவும் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையன்று கையெழுத்திட வாய்ப்புள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது ஜெனிவாவில் வைத்து கையெழுத்திடப்படலாம் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பதுடன் அதற்கான பணிகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.
லெபனானில் நடந்து வரும் போரையும் இந்த ஒப்பந்தம் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் ஈரான் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது…..
லெபனானில் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதமேந்திய குழுவினருக்கு எதிராக இஸ்ரேல் போரிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.