புத்தளம் – மதுரங்குளி பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் மூன்று நாட்களாகக் காணாமல் போயுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
7ஆம் தரத்தில் கல்வி கற்கும் 12 வயதுடைய மாணவனே அதே பிரதேசத்தை சேர்ந்த மாணவே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விடயம் தொடர்பில் பெற்றோர்கள் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர் .
மாணவனின் தாயார் வெளிநாட்டில் வேலை செய்வதால் அவரது பாட்டி வீட்டில் தங்கியிருந்ததாகத் தெரியவந்துள்ளது .
இந்நிலையில் காணாமல் போன மாணவன் தொடர்பிலான விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்