சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் பிரதான வீதியை அபிவிருத்தி செய்து தருமாறு கோரி இன்று திங்கட்கிழமை பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் பொது மக்களினால் இப் போராட்டமானது காலை 9.30 முதல் 10.20 வரை நடைபெற்றது.
இதன் போது கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள் , பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், கூலித்தொழிலாளிகள் போன்றவர்கள் செல்வதற்கு ஒழுங்கான பாதை இல்லை எனவும், மக்களின் வாழ்வாதாரம், விளையாட்டு மைதானம், வாசிகசாலை, வைத்தியசாலை போன்றவற்றை அமைத்துத் தருமாறும், சுனாமி வீட்டு திட்டத்தின் உறுதியையும் மற்றும் காணிகளின் உறுதிகளையும் பெற்று தர வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்