இலங்கை மகளிர் அணிக்கு வழங்கப்பட்டுள்ள பரிசுத்தொகை

2024 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத்தை வென்ற இலங்கை மகளிர் அணிக்கு 500,000 அமெரிக்க டொலர்கள் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் வழங்கிய குறித்த பரிசுத் தொகையை இலங்கை மகளிர் அணியின் தலைவி சமரி அத்தபத்து பெற்றுக்கொண்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த மகளிருக்கான ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி கிண்ணத்தைத் தன்வசப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்