இந்துக்கள், தமது முன்னோர்களின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திக்கும் நாளான ஆடி அமாவாசை தினத்தை பொது விடுமுறை நாளாக அறிவிக்குமாறு, சர்வதேச இந்துமத பீடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த வருடத்திற்கான ஆடி அமாவாசை விரத நாள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி வரவுள்ள நிலையில், இந்த தினத்தை விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என சர்வதேச இந்துமத பீட செயலாளர் சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்துள்ளார்.
இந்த புனிதமான ஆடி அமாவாசை விரத நாள், உயிர்நீத்த தமது முன்னோர்களுக்காக விரதம் இருந்து நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்து தான தர்மங்கள் செய்து சிவ வழிபாடு செய்வதற்கான புண்ணியமான நாளாகும்.
இந்த ஆடி அமாவாசை விரதம், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் மிகவும் பக்திபூர்வமாக அனுஷ்டிக்கப்படும்.
எனவே, ஆடி அமாவாசை விரத நாளை, இந்துமத அரச ஊழியர்களுக்கும், தனியார் துறையினருக்கும், மாணவர்களுக்கும் விடுமுறை நாளாக அறிவித்தால் இந்து மக்களுக்கு மிகவும் பெருமையான விடயம் என, சர்வதேச இந்துமத பீடம் தெரிவித்துள்ளது.