திவுலப்பிட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் தப்பிச்சென்றுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கைதி சிறைச்சாலையின் பூட்டை உடைத்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- Advertisement -
தப்பிச்சென்ற கைதி திவுலப்பிட்டி – வெலகான பகுதியைச் சேர்ந்தவராவார்.
இவர் ஹெரோயினுடன் நேற்று முன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
- Advertisement -