Sri Lanka Tamil News Site

பருப்பு மற்றும் சீனி விலை குறைப்பு

- Advertisement -

கொழும்பு – புறக்கோட்டை மொத்த சந்தையில் பருப்பு மற்றும் சீனி என்பனவற்றின் விலை குறைவடைந்துள்ளது.

இதற்கமைய, கடந்த வாரம் 400 ரூபாவாக நிலவிய ஒரு கிலோகிராம் பருப்பின் விலை, 25 ரூபாவால் குறைக்கப்பட்டு, 375 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

- Advertisement -

250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட,  ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 235 ரூபா என்ற அடிப்படையில் மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -