விமான நிலையத்துக்கு அருகில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு : பலர் படுகாயம்

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் தாஷ்கண்ட்டில் உள்ள விமான நிலையத்துக்கு அருகில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

குறித்த விமான நிலையத்துக்கு அருகே உள்ள சுங்க சுரங்கத்தில் நேற்று புதன்கிழமை நள்ளிரவு இக்குண்டு வெடிப்பு சம்பவம்  இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 162 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த குண்டு வெடிப்பினால் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளிலும் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இதில் காயமடைந்தவர்கள், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குண்டு வெடிப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு  வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.