கடந்த வருடம் இடம்பெற்ற 12 மணிநேர மின்தடை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 5ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
- Advertisement -
நேற்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், மின்சார பொறியியலாளர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவோம் என அமைச்சர் தெரிவித்தார்.
- Advertisement -