கம்பஹா அத்துருகிரிய பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதோடு பிரபல சிங்கள பாடகி கே.சுஜீவா உட்கட 5 பேர் காயமடைந்துள்ளனர்.
அத்துருகிரிய பகுதியை சேர்ந்த க்ளப் வசந்த என அழைக்கப்படும் வர்த்தகர் ஒருவரே பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வர்த்தக நிலையமொன்றின் திறப்பு விழாவில் பிரபல சிங்கள பாடகி கே.சுஜீவா கலந்துகொண்டபோதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
காயமடைந்தவர்கள் அத்துருகிரிய மற்றும் ஹோமாகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஹோமாகம வைத்தியசாலையில் நால்வர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அத்துருகிரிய வைத்தியசாலையில் இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்