கடுகண்ணாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிலிமத்தலாவை, கிராகமவத்தை பகுதியில் 20 வயதுடைய இளம் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாகக் கூறி, அவரைத் தேடுவதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி, காணாமல்போன பெண்ணின் கணவரால் கடுகண்ணாவை பொலிஸில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது மனைவி குடும்பத்தாருக்குத் தெரிவிக்காமல் வீட்டை விட்டுச் சென்றுள்ளதாகவும், இதுவரை அவர் வீடு திரும்பவில்லை என்றும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ள நிலையில், அந்தப் பெண் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் தமக்கு வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடுகண்ணாவை பொலிஸ்: 071 8591060 அல்லது 081 2571222