ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தயாரிக்க அனுமதி

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் அரசியலமைப்பின் 2 சரத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ள வருடங்களின் எண்ணிக்கையை திருத்தியமைப்பதற்காக அரசியலமைப்பு திருத்த சட்டமூலமொன்றை தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஜனாதிபதியின் பதவிக்காலம் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் தொடர்பில் அரசியலமைப்பின் 2 சரத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ள வருடங்களின் எண்ணிக்கையை திருத்தியமைப்பதற்காக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்றைய திகம் முன்வைக்கப்பட்ட குறித்த ஜோசனைக்கே அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.

அரசியல் அமைப்பின் 30:2 சரத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் எனவும் அரசியல் அமைப்பின் 62:2 சரத்தில் பாராளுமன்றத்தின் பதவிக்காலம் 5வருடங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அரசியல் அமைப்பின் “ஆ” சரத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 6 வருடங்களை விட நீடிக்கப்படுமாயின் அதற்காக முன்வைக்கப்படும் சட்ட மூலத்திற்காக சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் எக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு சரத்துக்களிலும் குறிப்பிடப்பட்டுள்ள பதவிக்காலத்தை 5 வருடங்கள் என திருத்தி அமைப்பதற்கு அரசியல் அமைப்பு மூல திருத்த சட்ட மூலத்தை முன் வைக்கவே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்