-யாழ் நிருபர்-
வடக்கு மருத்துவத் துறையில் உள்ள பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்திய வைத்தியர் அர்ச்சுனா விடுப்பில் கொழும்பு சென்றிருந்த நிலையில் விடுப்பு காலம் முடிவடைந்து இன்றையதினம் திங்கட்கிழமை மீண்டும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வருகை தரவுள்ளார்.
இந்நிலையில் அவரை வரவேற்கும் முகமாகவும் அவருக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும் மக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடினர்.
இந்நிலையில் அங்கு வந்த பொலிஸார் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு அவர்களை விரட்டியடித்தனர். இதனால் பொலிஸாரின் இந்த செயற்பாடு குறித்து மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்